Pagetamil
சினிமா

3 நடிகைகளுக்கு கொரோனா

இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா, தஸ்னிம் சேக் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவருடன் தொடர்ந்து சில நாட்களாக நெருக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட அல்பனா புச்சும் நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில், நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். படப்பிடிப்பில் பங்கேற்ற மற்ற நடிகர் நடிகைகளும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

Leave a Comment