வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர் அப்புத்துரை வேலுப்பிள்ளை நேற்று கொழும்பில் தனது 109வது வயதில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி காலமானார்.
இந்து வாலிபர் சங்கம் வட்டுக்கோட்டை, மற்றும் இந்து வாலிபர் சங்கம் கொழும்பு கிளை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தனது காணியினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கதிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்தவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1