சோபையிழந்த புத்தாண்டு வர்த்தகம்: ஈயோட்டும் யாழ் நகர வர்த்தகர்கள்!

Date:

யாழ்ப்பாணத்தில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுகிறது. அதனால் வர்த்தகர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன.

எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் அவர்களின் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை. திறக்கப்பட்ட கடைகளிற்கு வரவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு வர்த்தக நிலையங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நடைபாதை வியாபாரம் ஏராளமாக இடம்பெறுகின்றன. மாநகர வர்த்தக கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் நடைபாதை வியாபார நிலையங்களை நாடுவதை அவதானிக்க முடிகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்