ஆந்திராவில் நிஜ வாழ்க்கையில் காதலித்துக் கொண்டிருந்த அன்வர் – சமீரா ஜோடியை ‘பகல் நிலவு’ சீரியலில் ஜோடியாக்கி அழகு பார்த்தது விஜய் டிவி. தொடர்ந்து நடிப்பில் மட்டுமல்லாது சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார்கள் இவர்கள். அதிலும் அன்வர் தயாரித்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அதே நேரம், ஜீ தமிழில் ‘ரெக்கை கட்டிப் பறக்குது மனசு’ தொடரைத் தயாரித்தார் சமீரா.
இருவரது சீரியல்களும் முடிவடைந்த நிலையில் சீரியல்களுக்குக் கொஞ்சம் பிரேக் விட்டு நிஜ வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்கள். 2019-ம் ஆன்டு நவம்பர் 11-ம் தேதி இவர்களது திருமணம் இருவரின் பெற்றோர் முன்னிலையில் ஹைதராபாத்திலுள்ள அன்வரின் வீட்டிலேயே சிம்பிளாக நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு சென்னை திரும்பிய இருவருமே ஆளுக்கொரு சனலில் சீரியல் தயாரிக்க இருந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு அமுலுக்கு வர, ஹைதராபாத்துக்கே சென்றது ஜோடி.
அப்போது முதல் இருவரும் ஹைதராபாத்திலேயே இருக்கிறார்கள். ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு சீரியல் ஷூட்டிங் தொடங்கிய பிறகும் கூட இவர்கள் சென்னை திரும்பவில்லை. கேட்டபோது, “எந்தவொரு பெருந்தொற்றும் நிச்சயம் ரெண்டாவது ரவுண்டு வரும். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பலை” எனச் சொல்லியிருந்தார்கள்.
இந்நிலையில்தான் தற்போது தாங்கள் அம்மா – அப்பா ஆகப் போகிற மகிழ்ச்சியான செய்தியை வித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார்கள் இவர்கள்.



