கிளிநொச்சி மலையாளபுரம் புதிய ஐயன்குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான
சிறுபோக நெற்பயிர்ச் செய்கையானது கமக்கார அமைப்பிடம் வழங்கிய
அதிகாரிகளின் தீர்மானத்திற்கு விவசாயிகள் தங்களின் கடும் அதிருப்தியை
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 09.04.2021 அன்று மாலையாளபுரம்
கிராமத்தில் துறைசார் அதிகாரிகளின் பங்குபற்றுலுடன் இடம்பெற்றது.புதிய
ஐயன்குளத்தில் கீழ் 80 விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு
வருகின்றனர். இவர்கள் கடந்த காலத்தில் சிறுபோக நெற்செய்கையில் குளத்தின்
காணப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப 10 ஏக்கர் தொடக்கம் 15,20 ஏக்கர் வரை
பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு்ளளனர்.
ஆனால் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோகம் 15 ஏக்கர் என தீர்மானிக்கப்பட்டு
குறித்த 15 ஏக்கரையும் கமக்கார அமைப்பினை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு
அறுவடைக்கு பின் நெல்லினை விவசாயிகளுக்கு விதை நெல்லா விற்பனை
செய்யுமாறும் அதிகாரிகள் தீர்மானித்தமை தங்களுக்கு கடும் ஏமாற்றத்தை
தந்து்ளளது. என்றும் குளத்தில் இருக்கின்ற நீரின் அளவுக்கு ஏற்ப ஒரு சில
வாரங்களுக்கு முன் சிறுபோகம் தொடர்பில் தீர்மானித்திருந்தால் கால் ஏக்கர்
வீதம் 80 விவசாயிகளுக்கும் 20 ஏக்கர் நெற்செய்கையினை மேற்கெண்டிருக்கலாம்
எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதும் கூட சித்திரை மழை பெய்வதனால் 15 ஏக்கர் என தீர்மானிக்கப்பட்ட
சிறுபோக நெற்பயிர்ச் செய்கையினை 20 ஏக்கராக அதிகரித்து 80
விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதே அனைவரும் நன்மை தரும் எனவும் கமக்கார
அமைப்பிடம் முழு சிறுபோக நெற்செய்கையினை வழங்குவது பொருத்தமற்றது. எனவும்
இதனால் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனவும்
விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பொருத்தமான தீர்வினை
மேற்கொள்ளுமாறும் புதிய ஐயன்குளம் விவசாயிகள் கோரியுள்ளனர்.