பிரிட்டனில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால அங்கு மக்களுக்கு தேவையான தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரிட்டனில் 60% கொரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டனில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு,
* அனைத்து கடைகளையும் திறக்கலாம்.
* மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களான ஜிம், முடி திருத்தும் நிலையங்களை திறக்கலாம்
* உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கலாம்.
* நூலகங்கள், பொழுபோக்கு நிலையங்களை திறக்கலாம்.
* திருமண விழாக்களில் 15 பேரும் மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் 30 பேரு பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. .
* ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் திறக்க அனுமதி.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.