மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னார் புனித செபஸ்தியார் பேராலயக் கல்லறையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், மலர் அஞ்சலி செலுத்தினார்.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81வது வயதில் அண்மையில் காலமாகினார்.
ஆயரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியாதிருந்த நிலையில், இன்றைய தினம் (12) மன்னாருக்கு விஜயம் செய்திருந்த செந்தில் தொண்டமான், கல்லறைக்குச் சென்று, மலர் அஞ்சலி செலுத்தினார்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1