பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளை சவால் செய்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குநணநாதன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மனுத்தாக்கல் செய்தார்.
புதிய விதிமுறைகளில் தெளிவற்ற சொற்கள் உள்ளன, அவை பரந்த பயன்பாடுகளுக்கு வாய்ப்பேற்படுத்தும் என்று அவரது மனு கூறுகிறது. அரசியலமைப்பின் 10, 12, 13 மற்றும் 14.சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் இதனால் மீறப்படலாமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறாக கைது மற்றும் தடுப்புக்காவலை விதிமுறைகள் அனுமதிக்கின்றன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணையைத் தொடங்க அனுமதிக்கவும், இது ஒரு நபரை கைது செய்வதற்கான காரணத்தை அறிவிக்காமல், ஒரு நபரை குற்றவாளியாகக் கருதுவது போல் நியாயமான விசாரணைக்கு உரிமை பெறாமல் ஒருவரை பனர்வாழ்வுக்கு உட்படுத்த அனுமதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை அணுகுவதை விதிமுறைகள் தடுக்கலாம்,நீதித்துறை ஆய்வு இல்லாமல் 12 மாதங்கள் தடுப்புக்காவலை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த காரணிகள் அனைத்தும் ஒரு நபரை உரிமை மீறல்களுக்கு ஆளாக்கக்கூடும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.