வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்ப்பரப்பில் கரைவலைத் தொழிலில் வலையில் சிக்கிய மதுபானப் போத்தலின் திரவத்தை அருந்தியவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம், இந்த பானத்தை அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
சில தினங்களின் முன்னர் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதந்த வந்த பானத்தை கரைவலை தொழிலில் ஈடுபட்ட சுமார் 25 பேர் வரையானவர்கள் அருந்தினார்கள்.
இதில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் வரணி,குடமியனில் உள்ள வீட்டொன்றில் இருந்து ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.அவரும், நாகர்கோவிலில் கடலில் மிதந்து வந்த மதுபான போத்தலில் இருந்த திரவத்தை அருந்தியவர் என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1