புதிய அரசியலமைப்பில் சைவத்திற்கு முன்னுரிமையளியுங்கள்: மறவன்புலவு தலைமையில் சிவசேனை உண்ணாவிரதம்!

Date:

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மறவன்புலவில் உணவு தவிர்ப்பு ஈடுபடும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தொன்மையான ஒரேயொரு சமயம். ஏனையவை அனைத்தும் வந்தேறி சமயங்கள். சைவ சமயம் இன்று மிக கேவலமான நிலையில் உள்ளது. சைவர்கள் தொடர்ந்து இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும்.

மதமாற்றிகளின் செயற்பாட்டால் கிழக்கு மாகாணத்தை இழந்து விட்டோம். மன்னார் மாட்டத்தை இழந்து விட்டோம்.  மத மாற்றிகளினால் வடக்கில் பல சைவர்கள் பிற மதங்களிற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத மாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். பல முறை கொண்டு வர முயற்சித்தும், மேலாதிக்க சக்திகள் அதை தடுத்து விட்டன. மத மாற்ற தடைச்சட்டம் சைவர்களையும், புத்தர்களையும் காப்பாற்றும்.

அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள். அதனையும் நிறுத்த கோருகின்றோம். அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள். ஆனால் இலங்கை ஒரு சோலைவனம். இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது...

இஸ்ரேல் சென்ற விமானத்தை நடு வானில் கவிழ்க்க முயற்சி?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்