1.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!!

Date:

நாடுமுழுவதும் புதிதாக 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 794பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டகொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,32,05,926 கோடியாக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 77,567 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859ஆக உள்ளது.ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,68,436 ஆக உள்ளது.நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,46,631 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கொரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 9,80,75,160 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்