வெறிச்சோடியது மும்பை… 2 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்!!

Date:

மகாராஷ்டிராவில் வார இறுதி முழு ஊரடங்கு அமுலாகியுள்ளது. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து ககொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என அம் மாநில அரசு அறிவித்தது.

அதன்படி மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. ஹோம் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி இன்றும் நாளையும் அங்கு முழு ஊரடங்கு அமுலாகியுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த வார இறுதி ஊரடங்கு திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும். மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லை. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்