25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

மூக்கில் இருக்கும் முகப்பருக்களை நீக்க சில எளிய வீட்டு வைத்திய முறைகள்

முகத்தில் பருக்கள் வருவதே கொடுமையான விஷயம் அதிலும் மூக்கில் வரும் பருக்கள் மிகவும் வலி மிகுந்தது. மூக்கில் இருக்கும் பருக்கள் வலியை ஏற்படுத்தி வேதனையை அளிக்கும். மூக்கில் ஏற்படும் சிறிய பரு முகமெல்லாம் வலியை உண்டாக்கக் கூடியது. எனவே மூக்கில் ஏற்படும் முகப்பருக்களை நீக்க கண்ட கண்ட க்ரீம்களை நம்மால் போட முடியாது. அதை போக்க நாம் எளிய வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம்.

​முகப்பருக்கள்

மூக்கில் முகப்பருக்கள் தோன்ற சில முக்கிய விஷயங்கள் காரணமாகின்றன. முகத்தில் எண்ணெய் வழியும் போது சரும துளைகள் அடைபடுவதால் மூக்கில் முகப்பருக்கள் தோன்றுகிறது. சருக துளைகள் பெரிதாக இருக்கும் போது சருமத்தில் அழுக்கு, எண்ணெய்களால் சரும துளைகள் அடைபட்டு விடுகிறது. மூக்கில் இருக்கும் சரும துளைகள் சற்று பெரியதாக இருப்பதால் இந்த சரும பிரச்சனைகள் உண்டாகின்றன. அடைபட்ட சரும துளைகளால் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்ற பிற தோல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

வளராத முடிகள் கூட முகப்பருக்களை உண்டாக்கும். அதுவும் உங்க முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும். ஏனெனில் வளராத முடிகளுக்கு அடியில் உள்ள சருமம் எரிச்சல் அடைந்து பருக்களை உண்டாக்குகிறது. பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றும் முகப்பருவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

ஹார்மோன் மாற்றங்கள், எண்ணெய் அதிகமான உணவுகளை எடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளான அழுக்கு, மாசுக்கள் கூட பருக்களை உண்டாக்கும்.

​நீராவி பிடித்தல்

சரும துளைகளில் உள்ள அடைப்பை நீக்க நீராவி பிடித்தல் போன்ற விஷயங்களை செய்யலாம். நீராவி பிடிக்கும் போது துளைகளில் உள்ள அழுக்கு, மாசுக்கள் போன்றவை நீங்குகிறது. இதனால் சரும துளைகள் அடைக்கப்படுவது தடுக்கப்பட்டு முகப்பருக்கள் ஏற்படுவது குறைகிறது.

தேவையான பொருட்கள்

  • சுடு தண்ணீர்
  • ஒரு பெளல்
  • ஒரு துண்டு

பயன்படுத்தும் முறை

சுடுதண்ணீரை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு செளகரியமாக உட்கார்ந்து கொண்டு சுடு தண்ணீரைக் கொண்டு நீராவி பிடியுங்கள். துண்டு அல்லது போர்வையால் மூடிக் கொண்டு நீராவியை பிடியுங்கள். 5-10 நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு அதே துண்டை கொண்டு முகத்தை மூடிக் கொள்ளுங்கள். பிறகு க்ளீன்சர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

​லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸில் நிறைய அமிலத்தன்மை காணப்படுகிறது. இது முகத்தில் இருக்கும் பருக்களை உலர்த்தி முகப்பருக்கள் மற்ற இடங்களில் பரவாமலும் சலம் வைக்காமல் அப்படியே காய்ந்து போக உதவுகிறது. லெமனில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மைகள் உள்ளன. இது சருமத்தை சுத்தம் செய்து பொலிவான சருமத்தை அளிக்கிறது.

தேவையான பொருட்கள்

  • 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ்
  • ஒரு காட்டன் பஞ்சு

பயன்படுத்தும் முறை

ஒரு காட்டன் பஞ்சில் லெமன் ஜூஸை நனைத்து முகப்பருக்கள் உள்ள இடங்களில் தடவிக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் காத்திருங்கள். பிறகு முகத்தையும் மூக்கையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

​ஐஸ் கட்டி மசாஜ்

முகப்பருக்களை குறைக்க ஐஸ்கட்டி மசாஜ் உதவுகிறது. இது அழற்சியை எதிர்த்து போராடவும் வலியை குறைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • 1-2 ஐஸ் கட்டிகள்

பயன்படுத்தும் முறை

ஐஸ் கட்டிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு உலர வைக்கவும். முகப்பருக்கள் குறைந்து போய்டும்.

​மூக்கில் முகப்பருக்கள் வருவதை எப்படி தடுக்கலாம்?

முகத்தை அடிக்கடி கழுவுவது பாக்டீரியாக்கள் தொல்லையில் இருந்து காக்க உதவுகிறது. சரும துளைகளில் உள்ள அடைப்பு, அழுக்கை நீக்க சருமத்தை புதியதாக வைக்க சருமத்தை அதிகமாக கழுவ வேண்டும். நம் முகத்தை அடிக்கடி தொடும் போது பாக்டீரியாக்கள் தொற்று வாய்ப்புகள் உள்ளன. எனவே அழுக்கு கைகளால் சருமத்தை அடிக்கடி தொடுவதை நிறுத்துங்கள்.

காமெடோஜெனிக் மற்றும் எண்ணெய் சார்ந்த தயாரிப்புகளை தவிருங்கள். எண்ணெய் சார்ந்த தயாரிப்புகள் உங்க சரும துளைகளை அடைத்து முகப்பருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை உருவாக்குகிறது. எனவே நீர்சார்ந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள். எண்ணெய் சார்ந்த தயாரிப்புகள் வேண்டாம்.

​அதிகப்படியான நீரை பருகுங்கள்

அதிகப்படியான நீர் உங்க சருமத்தை ஈரப்பதமூட்ட உதவுகிறது. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

​சரும பராமரிப்பு

சரும பராமரிப்பை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். முகத்தை சுத்தம் செய்வது, ஈரப்பதமூட்டுதல் மற்றும் டேனிங் போன்ற சரும பராமரிப்பு முறைகளை தினந்தோறும் செய்து வாருங்கள்.

நம் முகத்தில் இறந்த செல்கள் சருமத்தை அடைத்து முகப்பருக்களை உண்டாக்குகிறது. எனவே சருமத்தை சுத்தம் செய்ய இறந்த செல்களை நீக்குவது அவசியம். வாரத்திற்கு 1-2 தடவை இறந்த செல்களை நீக்க முற்படுங்கள். இது சருமத்தை சுத்தம் செய்து முகம் பளபளப்பாக இருக்க உதவி செய்கிறது.

​முகப்பருக்கள் கிள்ளாதீர்கள்

நிறைய பேர் முகப்பருக்களை கிள்ளி விடுவது உண்டு. அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் முகப்பருக்கள் உங்களுக்கு சீரிய பாதிப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது உங்க முகத்தில் தழும்பை உண்டாக்கும். மேலும் முகப்பருக்கள் மற்ற இடங்களிலும் பரவ வழி வகுக்கும். முகத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

​மேக்கப்புடன் தூங்காதீர்கள்

படுக்கைக்கு செல்லும் போது மேக்கப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். படுக்கைக்கு போகும் போது முழு மேக்கப்பையும் கலைத்து விடுங்கள். இல்லை என்றால் மேக்கப் ஆனது சரும துளைகளை அடைத்து சரும பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும்.

​ஆரோக்கியமான உணவு

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு உங்க சரும ஆரோக்கியத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும். நீங்கள் பருக்களை கொண்டு இருந்தால் எண்ணெய் உணவுகள் மற்றும் சூடான உணவுகளை தவிருங்கள். ஏனெனில் இது சருமத்தை எண்ணெய் பசையாக்கி பருக்களை உண்டாக்கும்.

​சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யுங்கள்

சூரியனின் கடுமையான கதிர்கள் சரும ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே வெளியே செல்லும் போது எப்போதும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். SPF 30 கொண்ட சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment