பண்டிகை காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை பொலிசார் இன்று தொடங்கியுள்ளனர்.
மோட்டார் வாகக விபத்துக்களைத் தடுக்கவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை அடையாளம் காணவும் 24 மணிநேர நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிசார் சீருடையில் மற்றும் சிவில் உடையில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
ஒருவரின் பணியிடத்தில் சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பண்டிகை காலங்களில், மதுபானம் மற்றும் போதையூட்டும் மருந்துகளை பாவித்துவிட்டு வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1