Pagetamil
இலங்கை

தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படை நீச்சல் வீரர்

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த விமானப்படை வீரர் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைவார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.

குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment