ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனத்திற்கு அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட்டதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பஞ்சிஹேவ உட்பட ஐந்து உறுப்பினர்களால் வர்த்தமானியில் கையெழுத்திடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவர்களில், அதிக விருப்பு வாக்கு பெற்றவர்கள் வரிசையில் அஜித் மன்னப்பெரும தெரிவாகியுள்ளார்.
2020 ஓகஸ்ட் 5, பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நான்கு இடங்களைப் பெற்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் காலியாகிவிட்டதால், மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும தெரிவாகியுள்ளார். அவர் 47,212 வாக்குகளைப் பெற்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1