பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல்

Date:

பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஹெலிகாப்டர் ஆசையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றினார். தனது ஹெலிகாப்டருக்கு சிறுவனை அழைத்து விமானி அமரும் காக்பிட் பகுதியை காட்டினார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமையன்று கண்ணூர் மாவட்டத்தில் ஒரு டீக்கடையில் அத்வைத் என்ற சிறுவனைப் பார்த்தார். அவனிடம் பேசினார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசிய சிறுவனை ராகுலுக்குப் பிடித்துப் போனது. எதிர்காலத்தில் வளர்ந்து என்னவாகப் போகிறாய்? என்று ராகுல் கேட்டதற்கு, விமான பைலட் ஆக விரும்புகிறேன் என்று அத்வைத் தெரிவித்தான்.

மேலும், ஹெலிகாப்டரை நெருக்கமாக பார்த்தது இல்லை என்றும் கூறினான். சிறுவன் அத்வைத்தின் விருப்பத்தை நிறை வேற்ற முடிவு செய்த ராகுல் காந்தி மறுநாளே கோழிக்கோடு விமான நிலையத்தில் தான்பயணம் செய்யும் ஹெலிகாப்டருக்கு சிறுவன் அத்வைத்தை வரவழைத்தார். தனது ஹெலிகாப்டரின் உள்பகுதியை சிறுவனுக்கு காண்பித்தார். விமானிகள் அமரும் காக்பிட் பகுதியை ராகுலும் பெண் விமானியும் சிறுவன் அத்வைத்துக்கு காட்டி விளக்கினர்.

இந்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘சிறுவன் அத்வைத்தின் கனவை நனவாக்க முதல் படி எடுத்து வைத்துள்ளோம். இப்போது, ஒரு சமூகத்தையும் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டியது நமதுகடமை. அதுவே அந்த சிறுவனுக்கு பறப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்கும்’’ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதை 1.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலர் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...

பத்மேயின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்