ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குடாகம பகுதியில் தொலைபேசி இணைப்பிற்கான கேபிள்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்திலிருந்து சரிந்து வீழ்ந்த கேபிள்களால் இருவர் சிறு காயமடைந்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே இன்று (07) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அதிக வேகமாக சென்ற கனரக வாகனம் வீதி வளைவொன்றில் செல்கையிலே கேபிள்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளன.
இதன் போது பாதசாரிகள் இருவர் சிறு காயமுற்றதுடன், சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1