யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 54 பேருக்கு தொற்று உறுதியானது.
இதேவேளை, இன்று மேலும் ஒரு தொகுதியினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்த முடிவுகளும் வெளியான பின்னரே, யாழ் நகரில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
2
+1
+1
+1
+1
1