புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடொக்சின் மூலப்பொருட்களை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஆறையும் மீண்டும் மலேசியாவிற்கே ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆறு கொள்கலன்களும் கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவற்றை ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட திகதியொன்றை நிர்ணயம் செய்ய முடியாதென சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.
கொள்கலன்களை கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படும் கப்பல் ஆறு முதல் எட்டு நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1