தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் விஜய். அவர் தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்ததை தொடர்ந்து நெட்டிசன்கள் பலவிதமாக கருத்து வெளியிட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் விஜய் சைக்கிளில் வந்திருக்கிறார். மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரமணானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விஜய். கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் சூசகமாக கூறிவிட்டார் என பலரும் சமூக வலைதளங்களில் அடித்து விட்டுள்ளனர்.
அதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் ஆர்வக் கோளாறில் அலப்பறை செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணம் என அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது,
தன் வீட்டிற்கு அருகிலேயே வாக்குச்சாவடி இருந்ததாலும், காரில் சென்றால் இடைஞ்சலாக இருக்கும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றார். அவர் சைக்கிளில் சென்றதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.