இலங்கையின் திருமதி அழகு ராணி போட்டியில் ஏற்பட்ட பெரும் சர்ச்சை விவகாரம் இப்பொழுது சினமன் கார்டன் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், உலகளவில் அழகுராணி போட்டிகளை ஒழுங்கமைக்கும் அமைப்பும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது. அந்த அமைப்பு, அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் திருமதி அழகு ராணி போட்டியின் ஏற்பாட்டாளர்கள், முன்னாள் அழகுராணி கரோலின் ஜூரியிடமிருந்து மன்னிப்பு கடிதமொன்றை கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கரோலின் ஜூரியுடன் இணைந்து, அழகு ராணியாக தெரிவாகிய புஷ்பிகாவின் கிரீடத்தை அகற்றிய மற்றையவர், குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தரநாத் பஸ்நாயக்கவின் இரண்டாவது மனைவி ஆஷ்ய பஸ்நாயக்க ஆவார்.
தனது கிரீடம் அகற்றப்பட்டமை தொடர்பில் புஷ்பிகா பொலிசில் முறையிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை இரு தரப்பினரும் சுமகமாக தீர்த்துக் கொள்ளாவிட்டால், அதை மத்தியஸ்தர்சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறுகின்றனர்.