25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : மூன்றாவது தடவையாகவும் ஆரம்பித்தது இளைஞர்களின் போராட்டம்!

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் இன்று திங்கட்கிழமை (5) அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.ஏ.மஜீத், உட்பட இளைஞர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அரச உயர்மட்டம் முதல் குறித்த இலாக்காவுக்கு பொறுப்பான அமைச்சர்கள் வரை பேசியிருந்தும் இவ்விடயம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்புவெளியில் போக்குவரத்து தடை

east tamil

மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil

வெருகல் காணி பிரச்சினை தொடர்பில் உறுதியளித்துள்ள அருண் ஹேமச்சந்திரா

east tamil

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

east tamil

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

east tamil

Leave a Comment