மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Date:

கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் நேற்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 579ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 8 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 44 வயதான பெண் ஒருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த, 44 வயதான ஆண் ஒருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த மார்ச் 31ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 (மாளிகாவத்தை/ மருதானை) பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (02) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் தீவிர சுவாச நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 37 வயதான பெண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். இவரது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சுவாசச் சிக்கல், கொவிட்-19 நிமோனியா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்