புதையல் தோண்டிய 11 பேர் கைது!

Date:

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இருபிக்குமார் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்,

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்