ஏப்ரல் 21க்குள் மைத்திரி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கையில்லையேல் வீதிக்கிறங்குவோம்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய ஏனையவர்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்தினல் மல்கம் ரஞ்சித், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைக்குப் பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றிய கர்தினல்,  ஜனாதிபதி பதிவியில் இருந்த போது தனது கடமையை செய்ய தவறிய மைத்திரிபால சிறிசேன, மீண்டும் இன்னொரு முறை போட்டியிடுவதற்கு வெட்கப்படவில்லை என்று கூறினார்.

நாட்டின் மக்கள் மீதான தாக்குதலின் போது வெளிநாட்டில் இருந்தார் என கூறி, முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவ திறன்களை அவர் கேள்வி எழுப்பினார்.

தாக்குதல் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெற்றிருந்த ஜனாதிபதி, நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குற்றம்சாட்டினார்.

இறுதி அறிக்கையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக பெயரிடப்பட்ட பின்னரும், இந்த நபர்கள் எவ்வாறு சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது கத்தோலிக்க சமூகத்தை அவமதிப்பதாகும். ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் அவரது கவலைகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால் அவர்கள் வீதிகளில் இறங்குவார்கள் என்றும் கூறினார்.

மக்கள் துன்பப்படுகையில் கூட, தலைவர்கள் வீட்டிற்குச் சென்று இதுபோன்ற படுகொலைகளின் கைகளை எப்படி கழுவ முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்