வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டு பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால்சில்வாவின் வழிகாட்டலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாறசிங்க பிரேமசிறி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் பெறுமதியான 50 முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்டது.
இந்நிலையில் மரங்களை வெட்டிய சந்தேக நபர்களோ வாகனங்கோ அவ் இடத்தில் இல்லாத நிலையில் பொலிஸார் மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி வந்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த மரங்களை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1