மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி!

Date:

தலவாக்கலை, அக்கரப்பத்தனை – வோல்புறுக் பகுதியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக தளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மீது இன்று (4) பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காயமடைந்த இருவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ரவிகுமார் (43) என்பவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

தளம் வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இம் மூவர் மீதும் திடீரென மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவர்கள் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து பொலிஸாரும், பிரதேச வாசிகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இருவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...

பத்மேயின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்