யாசகம் எடுக்கும் தனது தாயை கவனிக்க தவறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
பங்கதெனியவை சேர்ந்த மூதாட்டியொருவர் நாத்தாண்டியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் செய்து வருகிறார்.
அவரது மகன் கவனிக்க தவறியதாலேயே மூதாட்டிய யாசகம் பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாயாரை ஏற்றுக்கொண்டு கவனிக்கும்படி பொலிசார் அறிவிப்பு விடுத்தனர்.
எனினும், அந்த நபர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1