27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
உலகம்

யப்பானின் மேற்கு ஒசாகாவில் முடக்கம்!

ஜப்­பா­னின் ஒசா­கா­வின் மேற்கு பகுதியில் கொரோனா தொற்று நான்­கா­வது முறை­யாக அதி­க­ரித்து வரு­கிறது.

அதைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அங்கு நேற்று அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­படுகிறது. வேலை நேரம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு பெரும்­பா­லா­னோர் வீட்­டில் இருந்து பணி­பு­ரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நக­ரத்­தில் நடை­பெ­று­வ­தாக இருந்த ஒலிம்­பிக் விளை­யாட்டு தொடக்கவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் இரத்து செய்­யப்­படும் என்று ஒசாகா ஆளு­நர் ஹிரோ­ஃபுமி யோஷி­முரா நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் ஒசாகா மட்­டு­மின்றி அதைச்­சுற்­றி­யுள்ள ஹியோகோ, மியாகி ஆகிய பகுதி­க­ளி­லும் அமுலாகும்..

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் ஏப்­ரல் 5ஆம் திகதி முதல் மே 5ஆம் திகதி வரை ஒரு மாதத்­திற்கு நடப்­பில் இருக்­கும் என்று பொரு­ளி­யல் துறைக்­கான அமைச்­சர் யசு­டோஷிகா நிஷி­முரா தெரி­வித்­தார். இவர் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்படுகிறார்.

கடந்த சில நாட்­க­ளாக ஒசாகா நக­ரில் வைரஸ் தொற்று மிக அதிகரித்துள்ளது. அந்த நகரை ­வி­டவும் பெரிய நக­ர­மான டோக்­கி­யோ­வை விடவும் அதி­கமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒசாகா வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தி­னம் மட்­டும் 599 புதிய தொற்­று­கள்    பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த ஜன­வரி மாதத் தொடக்­கத்­தில்­தான் ஜப்­பா­னில் அதி­க­மாக 654 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அப்­போது நாட்­டின் பல பகு­தி­களில் பிர­த­மர் சுகா அவ­ச­ர­கால           அறி­விப்பை விடுத்­தார்.

ஒசா­கா­வில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள கட்­டுப்­பாட்டை மீறும் நிறு­வ­னங்­க­ளுக்கு 200,000 யென் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அத்­து­டன் பொதுமக்­கள் கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் இருந்து வில­கி­யி­ருக்­கு­மாறு       கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

ஒசா­கா­வில் இரவு கேளிக்கை நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்­ளும் இளை­யவர்­கள்   தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­வ­தாக சட்­ட­மன்ற தலை­மைச் செய­லா­ளர் கட்­சு­னோபு கட்டோ நேற்று தெரி­வித்­தார். பாதிக்­கப்­பட்ட இளை­யர்­கள் அனை­வ­ரும் 20ல் இருந்து 30 வய­தில் உள்­ள­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

உருமாறிய கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே பரவல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

Leave a Comment