வவுனியாவை சேர்ந்த முதியவர் கொரோனாவால் சாவு!

Date:

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவர் ஒருவர் கொவிட்-19 தொற்றுகாரணமாக வெலிகந்தையில் நேற்று சாவடைந்துள்ளார்.

வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியைசேர்ந்த குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிலநாட்களிற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தபரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

இதேவேளை அவரது உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்