இராகலையில் நண்பர்களுடன் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!

Date:

நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02.04.2021) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ. அபினேஷன் என்ற மாணவரே (15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் குறித்த சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரிழ் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர். தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும். அதன்பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்