அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் பெயரிடப்பட்ட பிரதிவாதிகள் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.
அரசியலமைப்பின் விதிகளை மீறுதல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது தவறாக பயன்படுத்துதல், குறுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவால் பெயரிடப்பட்டவர்கள் குறித்து மேலும் விசாரிக்கவும் அறிக்கை செய்யவும் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரியந்த ஜெயவர்தன மற்றும் குமுதினி விக்ரமசிங்க மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருண ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.