அதிபர் மீது பலாத்கார குற்றச்சாட்டு… தொண்டர் ஆசிரியை தற்கொலை முயற்சி!

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்