தென்மராட்சி பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் திடீரென நிலத்தில் விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பரபரப்பு சம்பவம் இன்று (1) மாலை 4 மணியளவில், சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்றது.
ஆண் ஒருவர் பொருட்கள் வாங்க அங்கு சென்ற நிலையில் திடீரென நிலத்தில் விழுந்து மயக்கமடைந்தார். உடனடியாக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
1
+1
+1
1