கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தரம் 7,8 வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளன.
ஆண் ஆசிரியர் ஒருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் பாடசாலை விடுதியில் தங்கியிருந்தார். விடுதியில் வசிக்கும் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அவருடன் தொடர்பு கொண்ட மாணவர்கள் மீது சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த 70 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று விடுப்பு வழங்கப்பட்ட தரம் 7,8 மாணவர்களிற்கு இணைய வழி கற்பித்தல் நடக்கிறது.



