26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் ஒரு மாதத்தில் 536 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 536 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் நகரப்பகுதில் கொரோனா பரம்பல் அதிகரித்ததை அடுத்து வர்த்தக நிலையங்களையும் சந்தை தொகுதியையும் மூடியிருந்தோம். அதற்கு பின்னர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் குறித்த வர்த்தக நிலையம் மற்றும் சந்தை தொகுதாயில் பணியாற்றுகின்றவர்களுக்கன பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்திருந்தோம்.

குறிப்பாக 1440 பேரிடம் பி.சி.ஆர் மாதாரிகள் எடுத்திருந்தோம் அவர்களில் இதுவரை 35 பேருக்கு மாத்தாரமே தொற்று உறுதி செய்யப்பட்டுளௌளது.

யாழ்ப்பாண மாநகர சந்தை தொகுதியால் 117 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் கானப்பட்டுள்ளனர்.

அத்தோடு இரண்டு வாரங்களுக்கு முடிவடைந்ததும் முடக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அத்தோடு யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் மூடப்பட்டிருக்கும்.

நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்கு காரனம் கொரோனாவின் பரம்பல் தீவரம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே.

இதன் மூலம் கிடைக்கப்பற்ற முடிவுகளின் பிரகாரம் இதனை கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை கானப்படுகின்றது. எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

Leave a Comment