தன்சானியா ஜனாதிபதிக்கு இறுதிச் சடங்கு செலுத்துவற்காக பொதுமக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தன்சானியா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜோன் மகுஃபுலி (61), கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில், ஜோன் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிகழ்வில் திடீரென நெரிசல் ஏற்றட்டது. இதில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி இதயம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார் என்று அரசு தெரிவித்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.