கல்முனை மின்பொறியியலாளர் பிரிவில் மின்தடை அறிவித்தல்!

Date:

அம்பாறை மாவட்டம்  கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை (01) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (03) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், பீச் வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, வீவீ வீதி, சாய்ந்தமருது பொலிவோரியன், கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

திங்கட்கிழமை (05) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர், வௌவாலோடை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்கிழமை (06) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை கிராம பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

புதன்கிழமை (07) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிஜ்ரா புரம், செந்நெல் புரம் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை (08) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி, நைனாகாடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

சனிக்கிழமை (10) நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை ஜீ.ரீ.சி வீதி, அல்ஹிலால் வீதி, முந்தியடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்