இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

Date:

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக உள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த நாணயமாற்று விதத்திற்கமைய அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாகவும் , கொள்வனவு விலை 197.62 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரித்தது.

இந்நிலையில் இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலர் பெறுமதியுடன் ஒப்பீட்டளவில் இலங்கை நாணயத்தின் பெறுமதி நூற்றுக்கு 5.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்