கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால் நேற்று (30) இரவோடு இரவாக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என்பவற்றிற்கு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட கொரோனா செயலணி அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மூத்த விநாயகர் ஆலய மண்டபத்தில் திருமண நிகழ்வு நடப்பதற்கு பல வாரங்களின் முன்னரே முற்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்று அனுமதி பெறாமல் திருமணம் நடக்கவிருப்பதாக கிடைத்த தகலையடுத்து, நேற்றிரவே ம்ண்டபத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
2