கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு
முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட வேளை
ஐவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராதநாதபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் காட்டுப் பகுதியில்
நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு
பிரதேசங்களிலிருந்து வந்திருந்த ஐவர் கடந்த 29 ஆம் திகதி
புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப்
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்று பின்னர் பொலீஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டு ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஒருவர் பூசை வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் எனவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக
பயன்படுத்தப்படும் நவீன ஸ்கானிங் கருவி ஒன்றும் மற்றும் ஏனைய பொருட்கள்
இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம்பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இவர்கள்
இன்று(30) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்
அவர்கள் ஐவரையும் வருகின்ற ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.