சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில், கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள் இன்று கண்டி தலதா மாளிகைக்கு வருகை தந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கண்டியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய முன்னாள் ஜனாதிபதி, நாட்டின் மற்றும் அதன் மக்களின் எதிர்காலத்திற்காக, தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திரக்கட்சி அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றார்.
இருப்பினும் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கட்சி அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார்.
எதிர்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் நிறுவப்படுவதை உறுதி செய்ய நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக முற்போக்கு மற்றும் தேசபக்தி கட்சிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.