27.5 C
Jaffna
April 11, 2021

இலங்கை

முல்லைத்தீவிலும் போராட்டம்!

நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற்குரூஸ் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட நுண் நிதி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் நுண் நிதி கடன் வழங்குவதை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன் னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் வளர்பிறை பெண்கள் அடைப்பின் மாவட்ட இணைப்பாளர் ரி.பிரியந்தா உட்பட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளிற்குள் தீவிர கொரோனா: கம்பஹா நிலைமையேற்படுமா?

Pagetamil

மன்னார்- கொழும்பு புகையிரத முற்பதிவு தடங்கலை நேரில் சென்று ஆராய்ந்த அரச அதிபர்!

Pagetamil

சுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும், ஆர்பாட்டமும்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!