இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கொரோனா!

Date:

இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை எடுக்க உள்ளார். இதற்கான பணி நடந்து வந்தது. ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசரையே வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்தார் லோகேஷ். தற்போது கமல் அரசியல் பணியில் இருப்பதால் லோகேஷ் படத்திற்கான முன்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வரும் சூழலில் லோகேஷ் கனகராஜ், இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில், ‛‛என் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் ஒரு விஷயத்தை பகிர்கிறேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன். விரைவில் இதிலிருந்து மீண்டு தெம்பாக வருவேன்” என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்