27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்; கொரோனா வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது?

சீனாவில் உருவாகி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ், வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. இடையே மற்றொரு விலங்கும் இருந்துள்ளது என்று சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு 12.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது எனத் தெளிவான தகவல் இல்லை.

சீனாவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்றும், வூஹானில் உள்ள மீன் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்றும் பல்வேறு தகவல்கள் உருவாகின.

சீனாவில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினர் சென்று ஆய்வு நடத்த வேண்டும், கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, அதன் மூலாதாரம் என்ன, ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், சீனாவில் ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பின்னர் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் சீனா சென்று ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் பீட்டர் பென் எம்பார்க் தலைமையிலான குழுவினர் சீனாவின் வூஹான் மாநிலம் சென்று கொரோனா வைரஸ் குறித்து கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு அறிக்கையை அதிகாரபூர்வமாக ஆய்வுக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த சில நாட்களில் ஆய்வறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த ஆய்வில் முக்கியத் தகவல் ஒன்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்குக் கசிந்துள்ளது.

அதாவது சீனாவில் உருவான கொரோனா வைரஸ், ஆய்வகங்களில் இருந்து நிச்சயம் உருவாக வாய்ப்பில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து பரவியிருக்கலாம், ஆனால், வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவாமல், வேறொரு விலங்கின் மூலம் பரவியிருக்கலாம், அது வீட்டில் வளர்க்கும் கீரிப்பிள்ளை அல்லது பூனை இரண்டில் ஒன்றாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கப்படும் குளிர்பதன அறைகள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் ஆகியவை மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம் விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் கொரோனா வைரஸ் குடும்பத்தோடு ஒத்த அமைப்புடைய வைரஸ், எறும்புத்தின்னி உடலிலும், பூனை, கீரிப்பிள்ளை உடலிலும் இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

Leave a Comment