தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது.
நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை, துணியால் நெரித்து கொலை செய்துள்ளார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ஜானக சம்பத் ஜெயரத்ன (42) என்பவரே கொல்லப்பட்டார். அவரது மனைவி டி.அனுஷா தில்ஹானி (38 ) கொஸ்வத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கணவனை கொலை செய்த பின்னர் 119 அவசர இலக்கத்தை அழைத்த மனைவி தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.
அவர்களின் 6, 4, 2 வயதான பிள்ளைகள் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
4