30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

‘சிங்களத்தில்தான் கடிதம் அனுப்புவோம்… மொழிபெயர்த்து புரிந்து கொள்ளுங்கள்’; தொல்லியல் திணைக்கள அதிகாரி எகத்தாள பதில்: வலி.கிழக்கு தவிசாளர் அதிர்ச்சி தகவல்!

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என்.டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர். ஆந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையிட நான் சென்றேன். அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள். இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர் நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது. எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது என தெரிவித்தபோது தாம் எமக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியிலானால் கூறப்பட்டது.

அதற்குத் தவிசாளர், தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது. நான் அதனை அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன். வடக்குக் கிழக்கில் அரச கருமமொழி தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்து;கொள்ளவேண்டும் என்ற போது தொல்லியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் தான் கடிதம் அனுப்புவதாகவும், பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார்.

தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம், அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டது.

மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர். தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம் பாரப்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தன்னிடம் பெறப்பட்டதாகவும்,. யார் கூறி நிலாவரைக்கு வந்தேன். நிலாவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினேன், என்ன பேசினேன் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றதாக வலிகாமம் கிழக்கு தவிசாளர் தி.நிரோஷ் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment