26.4 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

என்னை சந்திக்க சாராயமும், நாட்டுக்கோழியும் கொண்டு வரத் தேவையில்லை: கருணா அதிரடி அறிவிப்பு!

அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம். ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். அதுவும் ஆட்டோவிலும் போகமுடியாது காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார்.  பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கூறியால் மக்கள் தான் என்ன நினைப்பார்கள். தமிழன் எங்கு தான் வாழ்கின்றானோ அவனுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பிரதமரின் மட்டு அம்பாறை அமைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களுக்கான கட்சியின் நியமனம் வழங்கும் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை(28) செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

அண்மையில் எனக்கு ஒரு தகவல் வந்தது. அம்மானை சந்திக்க வேண்டும் என ஒருவர் கேட்டிருக்கின்றார். அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம். ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். அதுவும் ஆட்டோவிலும் போகமுடியாது காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார். அதுவும் பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கூறியால் மக்கள் தான் என்ன நினைப்பார்கள். இன்று வேலைவாய்ப்பிற்காக காசு வாங்குகின்றார்கள்.அவர்களை பொலிஸில் ஒப்படைக்க சொல்லி கூறியுள்ளேன். நமக்கு அந்த காசு வாங்கும் கொள்கை இல்லை. நாம் கட்சியை வளர்த்து செல்வதே நோக்கமாகும்.

ஆனால் கொள்கை மாறவில்லை. தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினோம். அதில் முடிவு காணவில்லை. இனி அரசியல் ரீதியாக அதனை பெற ஆரம்பித்து தற்போது கட்சியை ஆரம்பித்து திறம்பட மேற்கொண்டுள்ளோம். அந்த அடிப்படையில் எமது கட்சி பலமான கட்சியாக வளர்ந்து வருகின்றது. எமக்குள் பிரதேச வாதம் இல்லை. அம்பாறை திருகோணமலை வன்னி ஆகிய பகுதிகளிலும் எமது கட்சி அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். தமிழன் எங்கு தான் வாழ்கின்றானோ அவனுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். எமக்காக உலகம் முழுவதும் எத்தனை பேர் சிரமப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நான் நிற்கின்ற போது வெளிநாட்டில் உள்ள அத்தனை நல்லுள்ளங்களும் நிதிகளை வழங்கினார்கள்.

உண்மையில் அவர்களை மறக்க முடியாது.முகநூலில் எமக்காக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் அம்பாறை மாவட்ட மக்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கான சகல விடயங்களும் முடிவுறும் நிலையில் அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பாளருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment