யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பாற்பண்ணை கிராமத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொதுச்சந்தை வர்த்தகர்கள், தொடர்பிலிருந்தவர்கள் என கணிசமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். இதில், பாற்பண்ணை கிராமத்தில் இருந்து இதுவரை 51 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்தே, நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1